• Mo.. März 24th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பிடிபட்ட பல கோடி மதிப்புடைய 300 கிலோ கஞ்சா

März 22, 2025

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மகனுடன் முரண்பாடு: யாழில் தாய் எடுத்த விபரீத முடிவு

இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் மற்றும் கடற்படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

பருத்தித்துறை பொலிஸ் தலைமை அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகைதந்து குறித்த விடயத்தை ஆராய்ந்ததுடன், கைதுசெய்யப்பட்ட பொருட்கள் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெருந்தொகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed