• Mo.. März 24th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புதிய கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்

März 22, 2025

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC EDR என்ற தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, „பொதுமக்களிடம் முறைப்பாடுகள் இருந்தால், இப்போது இந்த செயலி மூலம் அதைச் சமர்ப்பிக்கலாம்.

முறைப்பாட்டை அளித்த நபரும் தங்கள் முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியலாம். இந்த செயலி மூலம் வீடியோ மற்றும் புகைப்படத் தகவல்களை வழங்கும் வசதியும் உள்ளது.“ என்றார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed