• Sa.. März 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் இரு தமிழ் இளைஞர்கள் கைது

März 21, 2025

கனடாவில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ மார்க்கம் பகுதியை சேர்ந்த 25 வயதான கோகிலன் பாலமுரளி, நோர்த் யோர்க் நகரை சேர்ந்த 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிக்கரிங் நகரில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச் சாட்டில் இவர்கள் இருவரை ரொரன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிக்கரிங் Mansion Kitchen and Bar இல் கொலைக்கான இலக்கு வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய சந்தேக நபர்கள் இருவரும் மீதும் முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிருபிக்கப்படவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed