சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உட்பட 4 வீரர்கள் இன்று விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அதன்படி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாகப் பிரிந்து, பூமியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 9 விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளனர்.
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பிரிந்துள்ள டிராகன் விண்கலமானது இலங்கை நேரப்படி நாளை (19) அதிகாலை 3.27 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடாவில் தரையிறங்கவுள்ளது