பொதுவாகவே நமது முன்னோர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஒரு முக்கிய காரணம் நிச்சயம் இருக்கும்.
அந்த வகையில் தொன்று தொட்டு புலக்கத்தில் உள்ள ஒரு விடயம் தான் காகம் கரைந்தால், விருந்தினர்கள் வருவார்கள் என்ற கருத்து.
அதன் பின்னால் இருக்கும் உண்மை காரணம் பற்றி உங்களுக்கு தெரியுமா? உண்மையிலேயே காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்களா? இது தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடல் பயணங்களில் காகம்
அந்த காலத்தில் மாலுமிகள் கடல் பயணம் மேற்கொள்ளும்பொழுது கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிப்பதற்காக சில காகங்களை தங்களோடு கொண்டு செல்வர்களாம்.
நடுக்கடலில் கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும் போது கடற்கரைக்கு செல்ல விரும்பினால், கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள, அவர்கள் தங்களோடு கொண்டுவந்துள்ள சில காகங்களை கட்டவிழ்த்து விடுவார்கள்.
அந்த காகங்கள் எந்த திசையில் பயணிக்கிறதோ, அந்த திசையில் தான் கரை உள்ளது என்று மாலுமிகள் வெகுவாக கணித்துவிடுவார்கள்.
காகங்கள் இயல்பாகவே கடல் பகுதிகளில் விட்டால் கரையை நோக்கி செல்லும் குணத்தை கொண்டிருப்பதை அவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது சற்று வியப்பாகத்தான் உள்ளது.
அதே சமயம் அந்த காகங்கள் ஊருக்குள் கரைந்து கொண்டே சென்று எதாவது ஒரு மரத்திலோ அல்லது வீட்டின் கூரையிலோ அமர்ந்து கரைந்து கொண்டிருக்கும்.
அதை பார்க்கும் ஊரார் கடலில் இருந்து மாலுமிகள் வரப்போகின்றனர் என்பதை புரிந்து கொண்டு, வருபவர்களை விருந்தாளியாக பாவித்து, வந்ததும் இளைப்பாற தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள்.
இச்செயலே பின்னாளில் காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்கள் என்ற எண்ணக்கரு தோன்றுவதற்கு முக்கிய காரணதமாக அமைந்துள்ளது.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல் பயணங்களயில் ஆமைகளும், காகங்களும் பயன்படுத்தப்பட்மமைக்கான சான்றுகள் இருக்கின்றன.
ஆமைகள் கடல் வழிப்பாதைகளை கண்டுப்பிடிப்பதற்கும், காகங்கள் கரையை எளிமையாக கண்டுப்பிடிப்பதற்கும் துணைப்புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.