வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வான் ஒன்று மோதிய வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து மட்டக்களப்பு (Batticaloa) – திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
யாழ். கொக்குவில் காங்கேசன்துறை (KKS) வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுசகின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு பேருந்து இருந்து இறங்கிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை வீதியில் கொழும்பை நோக்கி சம்பவ தினமான இன்று அதிகாலை 6.30 மணிக்கு பிரயாணித்த வான் தனியர் வங்கியான ஹற்றன் நஷனல் வங்கிக்கு முன்னால் வீதியை கடக்க முற்பட்ட குறித்த நபருடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், வான் சாரதியை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.