• Di.. März 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் யாழைச் சேர்ந்த 20 வயது பெண் சுட்டுக்கொலை !

März 11, 2025

கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

யாழ் கோண்டா பிரதேசத்தில் 20 வயதான பெண் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீட்டின் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சோலஸ் ரோட் பகுதியின் கேஸ்டில்மோர் அவென்யூ மற்றும் ஸ்வான் பார்க் ரோட் அருகே இந்த வீடு அமைந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed