• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

März 8, 2025

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடமொன்றில், பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் மானிப்பாய் வீதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த போதே சந்தேக நபரான இளைஞன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் யாழ்.போதைப்பொருள் தடுப்பு பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், 24 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து கஞ்சா கலந்த மாவா 4 கிலோ 250 கிராம், 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள் மற்றும்  வாசனைத் திரவியம் போன்ற பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரான இளைஞன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed