• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் திறக்கப்படவுள்ள யால தேசிய பூங்கா

März 5, 2025

யால தேசிய பூங்காவில் (Yala National Park) சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சில சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த சாலைகள் இன்று (05) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இன்று (05.03.2025) பிற்பகல் 2:00 மணி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் யால தேசிய பூங்காவின் சாலை அமைப்பிற்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கும், அதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும், மார்ச் 01ஆம் திகதி முதல் யால தேசிய பூங்காவை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், மழை காரணமாக கடந்து செல்ல முடியாத சாலைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தொடர்ந்து மூடப்படும்.

இன்று காலை யால தேசிய பூங்காவில் பெய்யும் மழையைப் பொறுத்து இந்த நிலைமை மாறக்கூடும் என்று வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed