கொழும்பு – கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோயகத்தை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரையும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரையும் துப்பாக்கி சகிதம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.