சுவிஸர்லாந்து, Chur நகரில் Giacometti பாடசாலையில் இன்று பட்டாசு வெடித்ததில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலையின் படிக்கட்டுகளில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது.இதையடுத்து பொலிசார் விரைந்து சென்று தேடுதல்களில் ஈடுபட்டனர்.
இந்த பட்டாசு விபத்தில் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 24 மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக Graubünden கன்டோனல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.