• Do.. Feb. 6th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தை கிருத்திகை முருகனின் அருளை முழுவதுமாக பெற வழிபாட்டு முறை

Feb. 6, 2025

முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்று கிருத்திகை விரதம். அதுவும் தை மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் முருகனின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.

வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். நீங்கள் முருகனிடம் என்ன வேண்டுதல் வைத்தாலும், யாருக்காக வேண்டுதல் வைத்தாலும் அது விரைவில் நிறைவேறும்.

பதவி உயர்வு, உயர்வான நிலையை அடைய, தொழில் சிறக்க, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, செவ்வாய் தோஷம் நீங்க, குடும்ப சிறக்க என எந்த கோரிக்கைக்காக வேண்டுமானாலும் தை கிருத்திகையில் விரதம் இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

தை கிருத்திகை இந்த ஆண்டு பெப்ரவரி 06ம் திகதியான வியாழக்கிழமை வருகிறது.

பெப்ரவரி 06ம் திகதி தை கிருத்திகை அன்று எப்போது முடிகிறதோ அந்த சமயத்தில் முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று சில குறிப்பிட்ட முறையில் வழிபட்டால் வாழ்க்கை பிரகாசமாக, அமோகமாக இருக்கும். முருகப் பெருமானின் அருளும் கிடைக்கும்

வழிபாட்டு முறை 

தை கிருத்திகை அன்று காலை துவங்கி, மாலை வரை விரதம் இருந்து வழிபடலாம். முருகனுக்கு பால் மற்றும் தேனால் அபிஷேகம் செய்யலாம். பால் அபிஷேகம் செய்வதால் ஆயுள் விருத்தி ஏற்படும். அதே போல் முருகப் பெருமானுக்கு செவ்வாழை படைத்து அர்ச்சனை செய்வது மிக மிக விசேஷமானதாகும்.

செவ்வரளி மலர்களால் முருகப் பெருமானுக்கு அச்சனை செய்வதும், செவ்வரளி மாலை சாற்றுவதும் சிறந்தது. இதை முடித்து விட்டு 6 முறை முருகப் பெருமான் சன்னதியை சுற்றி வந்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டினை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

தை கிருத்திகை அன்று முருகப் பெருமானிடம் வைத்த வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேற வேண்டும் என்பவர்கள் 6 எலுமிச்சம் பழத்தை வாங்கிச் சென்று முருகனின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும்.

பிறகு உங்களுக்கு தற்போது எத்தனை வயது நடக்கிறதோ அத்தனை விளக்குகள் ஏற்றியோ அல்லது எத்தனை வயதாகிறதோ அந்த எண்ணிக்கையில் முருகப் பெருமான் ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.

108 முறை சுற்றி வருவது இன்னும் சிறப்பானதாகும். அப்படி சுற்றி வந்து வழிபட்ட பிறகு, முருகப் பெருமான் காலடியில் வைத்த 6 எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வர வேண்டும்.

வீட்டின் பூஜை அறையில் எப்போதும் ஏற்றும் விளக்கினை ஏற்றி வைத்து விட்டு, கோவிலில் இருந்து கொண்டு வந்த 6 எலுமிச்சம் பழங்களை இரண்டாக நறுக்கி, அதன் சாறை பிழிந்து விட்டு, மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்து பூஜை அறையில் ஒரு இலை அல்லது தட்டு வைத்து வரிசையாக விளக்கேற்ற வேண்டும்.

நல்லெண்ணெய், நெய் என எது முடிகிறதோ அதால் விளக்கேற்றி, அது தானாக குளிரும் வரை விட்டு விட வேண்டும். இப்படி விளக்கேற்றுவதால் வீட்டில் இருக்கும் தீய அதிர்வுகள் நீங்கி, முருகப் பெருமானின் அருள் நிறையும். உங்களின் வாழ்க்கை பிரகாசமாவதுடன், நீங்கள் முருகப் பெருமானிடம் முன் வைத்த வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed