பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணம் நற்பிட்டிமுனையை பூர்விகமாக கொண்டவரும் , UK- Liverpool Bootle நகரில் வசித்த 28 வயதான காயத்ரி ஜெயதீசன், கடந்த ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக ( allergic reaction to seafood ) உயிரிழந்துள்ளார்
உயிரிழந்த பெண்ணின் தாயார் அண்மையில் இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் நிலையில் , இந்த சம்பவம் அங்கு வாழும் ஈழத் தமிழரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.