• Sa.. Feb. 1st, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் இலங்கை தமிழர் கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் தாக்குதல் .

Feb. 1, 2025

கனடாவில் ரொரன்ரோவில்  இலங்கை   தமிர் ஒருவரின்  நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் கடையின் உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று முன் தினம் (30) நடந்த இந்த கொள்ளை முயற்சி தாக்குதலில் கடை உரிமையாளர் காயமடைந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் திருடப்பட்ட வாகனம் ஒன்றை ஐவர் நகைக் கடையினுள் செலுத்தி கொள்ளையடிக்க முயன்தாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அதேவேளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் திருடப்பட்டவை எனவும் ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed