• Fr.. Jan. 24th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாடளாவிய ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள்

Jan. 24, 2025

நாடளாவிய ரீதியில் 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதில் அதிகூடிய மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், 17 மாணவர்கள் 187 முதல் 186 வரையான மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.  

2024 ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05 ஆகும்.

இந்த ஆண்டு முடிவுகளின்படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இது சற்று அதிகமாகும்.

இதேவேளை, கடந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed