• Mi.. Jan. 22nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கள்ளு தவறணையில் கள்ளு அருந்திவிட்டு இருந்தவர் மரணம்!

Jan. 22, 2025

இளவாலை தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது சங்குவேலி தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கவேலு (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அந்த நபர் நேற்றையதினம் குறித்த தவறணையில் கள்ளினை குடித்தவேளை அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இளவாலை பொலிஸார் அவரது சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed