• Mi.. Jan. 22nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சனிப்பெயர்ச்சி, சூரிய கிரகணத்தால் பண வரவு பெறப்போகும் ராசிகள்

Jan. 22, 2025

சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தால் பண வரவு பெறப்போகும் ராசிகள் எவை என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தின் படி, சனி மிகவும் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சனிதேவ் கர்மாவின் கிரகமாக கருதப்படுகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் சனிப் பெயர்ச்சியும் சூரிய கிரகமும் சிறப்பு வாய்ந்தவை. வேத நாட்காட்டியின்படி, 29 மார்ச் 2025 அன்று சனி தனது ராசியான கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.

இந்த நாளில் ஒரு பகுதி சூரிய கிரகணமும் இருக்கும். சனியின் ராசி மாற்றமும் சூரிய கிரகணமும் இணைந்து பல ராசிகளுக்கு நல்ல காலத்தை உருவாக்க உள்ளது. அந்த ராசிகள் யார் யார் என தெரிந்துக் கொள்வோம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமும் சனிப் பெயர்ச்சியும் இணைந்திருப்பது நல்ல பலன்களை தரப்போகிறது. பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும், ​​தொழிலதிபர்கள் பணம் சம்பாதிக்க திடீர் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணியிடங்களில் உங்கள் பணி பாராட்டப்படலாம்.

தனுசு

சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் ஆகிய இரண்டும், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலத்தை உருவாக்கப் போகிறது. நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க இந்த நேரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். குடும்பத்துடன் நீங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். இது உறவை நிலையானதாக வைத்திருக்கும். மேலும், வரவிருக்கும் பிரச்சனைகளை சிறப்பாக சமாளிப்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் மற்றும் சனிப்பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் சொத்து தொடர்பான சர்ச்சைகள் தீரலாம். பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நிதி பிரச்சனைகள் தீரும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed