விநாயகர் வழிபாடு என்பது மிக எளிமையான வழிபாடாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த, விரைவில் பலன் தரக் கூடிய வழிபாடாகும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு, அவருக்குரிய மந்திரங்களை மனம் உருகி சொல்லி வந்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல், வெற்றி, செல்வம் ஆகியவற்றை ஈர்க்கும் தன்மை ஏற்படும். லட்சியங்களை அடைய முடியும். விருப்பங்கள் நிறைவேறும்.
சதுர்த்தி, குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி அன்று வீடு அல்லது கோவிலில் விநாயகர் சன்னதியில் விளக்கேற்றி வைத்து, அருகம்புல் அல்லது வெள்ளை எருக்கம்பூ மாலை சாற்றி, 108 முறை சொல்லுவது மிக அதிகமான பலன்களை கொடுக்கும்.
விநாயகரின் அருளை பெற விரும்புபவர்கள் விநாயகருக்குரிய ஏழு மந்திரத்தை சொல்லியோ அல்லது சொல்ல முடியாதவர்கள் எழுதியோ வழிபட்டால் சிறந்த பலனை பெறலாம்.
சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரங்கள்
1. வக்ரதுண்ட மஹாகாய சுர்யகோடி சமப்ரபா நிர்விக்னம் குருமேதேவா சர்வ கார்யஷு சர்வதா
2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம்மி வஷமானய ஸ்வாஹா
3. ஓம் கம் கணபதயே நமஹ
4. ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி பிரசோதயாத்
5. கஜானனம் பூத கணாதி சேவிதம் கபித்த ஜம்போ பலசார பக்ஷிதம்
6. ப்ரணாம்ய சிரசா தேவம் கெளரி புத்ரம் விநாயகம்
7. ஓம் நமோ ஸித்தி விநாயகாய சர்வ கார்ய கர்த்ரே சர்வ விக்ன பிரஷாம்நயே சர்வர்ஜய வஷ்யகர்னாய சர்வஜன் சர்வஸ்த்ரி புருஷ் ஆகர்ஷனாய ஸ்வாஹா
இந்த ஏழு மந்திரங்களையும் சொல்ல முடியாவிட்டாலும் எளிமையாக, „ஓம் கம் கணபதியே நமஹ“ அல்லது „ஓம் கணேசாய நமஹ“ என்ற எளிய மந்திரங்களை 108 முறை சொல்லி வரலாம். இவைகளும் அதிக பலன் தரும் கணபதியின் மூல மந்திரங்கள் ஆகும்.