அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று (15-01-2025) மதியம் 2:00 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.