• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தைப் பொங்கல் திருநாள் கொண்டாட்டமும் வழிபாட்டு முறைகளும்

Jan. 14, 2025

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை அன்று உழவர்களின் உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு பால் பொங்கும் போது ‚ பொங்கலோ பொங்கல்‘ என மகிழ்ச்சியுடன் கூறி சூரிய பகவானை வணங்குவர்.

சூரியன் அனைத்து மதத்தினரும் வழிபடும் கண்கண்ட தெய்வமாக கருதப்படுகிறார். இவருடைய வழிபாடு பழங்காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக இருந்தது. ஆனால், இப்போது கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒருவராக சூரிய பகவான் திகழ்கிறார்.

தைப் பொங்கல் திருநாள் கொண்டாட்டமும் வழிபாட்டு முறைகளும் | Pongal Thinathin Kondattam Valipadu Murai

தைப் பொங்கல் வழிபடும்முறை

பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகைக்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும், இன்பமும் நிலைக்க காவி நிறம் பூசப்படுகிறது.

தைப் பொங்கல் திருநாள் கொண்டாட்டமும் வழிபாட்டு முறைகளும் | Pongal Thinathin Kondattam Valipadu Murai

அதன் பிறகு அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் வைத்து படைக்க வேண்டும்.

தைப் பொங்கல் திருநாள் கொண்டாட்டமும் வழிபாட்டு முறைகளும் | Pongal Thinathin Kondattam Valipadu Murai

பொங்கல் வைக்கும் முறை

விநாயகரை முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிட வேண்டும்.

தைப் பொங்கல் திருநாள் கொண்டாட்டமும் வழிபாட்டு முறைகளும் | Pongal Thinathin Kondattam Valipadu Murai

பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும். பின்னர் தம்பதியராக சேர்ந்து சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி போட வேண்டும். பின்னர் சூரியபகவானை வணங்கியபடி பானையை 3 முறை சுற்றி மூட வேண்டும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed