• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

Jan. 14, 2025

தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பான பண்டிகையான தைத்திருநாள் இன்று (14) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகைளில் தைத்திருநாள் முக்கிய இடம் வகிக்கின்றது.

உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக தைத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.

சூரிய தேவனையும் இயற்கையையும் முன்னிருத்தி கொண்டாடப்படும் குறித்த தைத்திருநாள் பண்டிகை தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.

இந்தநிலையில், இன்றைய தினம் குறித்த தைத்திருநாள் பண்டிகையை நாடாளாவிய ரீதியில் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இணையத்தின் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்…!

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed