• Fr.. Jan. 10th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோப்பாய் பகுதியில் மண்ணெண்ணை குடித்த குழந்தை பலி!

Jan. 10, 2025

தாயார் சமையல் செய்த வேளை தாய்க்கு தெரியாமால் மண்ணெண்ணையை எடுத்து பருகிய ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு – யாழில் சம்பவம்

(09.01.2025), யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இதன்போது கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று மதியம் தாயார் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை குறித்த குழந்தை மண்ணெண்ணெயை எடுத்து குடித்துவிட்டு, உடலிலும் பூசிவிட்டு விளையாடிக்கொண்டிருந்ததது. இதை அவதானித்த தாயார் குழந்தையை தூக்கினார். அப்போது குழந்தை மயக்கமடைந்தது. பின்னர் வைத்தியசாலையில் சேர்ப்பித்த போதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed