• Do.. Jan. 9th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் உயிர்மாய்ப்பு

Jan. 8, 2025

கொட்டகலை ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தில் தலையை வைத்து  இளைஞன் ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்டதாக  திம்புள்ள பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று மதியம் கொட்டகலை – கிரிஸ்லஸ்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து, பதுளை நோக்கி செல்லும் ரயிலில் மோதியே இவர் உயிரிழந்ததாக  திம்புள்ள பத்தனை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இந்த இளைஞன் பற்றிய விபரம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed