வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
காணாமல் போன இளைஞரைை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
உயிரிழந்த இளைஞர் பல்துறைகளிலும் திறமையான வீரா் என்பது வதிரி டயமன்ஸ் அணி முக்கிய வீரராக விளங்கியவர் என்று தெரிக்கப்படுகின்றது
சம்பவத்தில் சுப்பிரமணியம் அரவி்ந் வயது 33 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் அழுகிய நிலையில் கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து இன்று (02/01/2025) வியாழக்கிழமை பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வயலுக்கு பசளை இடச் சென்றவர்கள் மேற்படி சடலத்தை கண்ட நிலையில் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.