தென்கொரியாவில் உள்ள ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அவசாமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.விமானத்தில் இருந்த 161 பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று, தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில், ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர்.
ஜெஜூ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 24 மணி நேரத்திற்கு முன்னரே ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் பதிவான சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.
இதேவேளை நோர்வே (Norway) ஒஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானமே நோர்வேயில் உள்ள டார்ப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[DY68BD ]
இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டார்ப் விமான நிலையத்தில் (Torp Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.