• Mi.. Jan. 1st, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பெண் கைது !

Dez. 29, 2024

4.068 கிலோகிராம் கொக்கேய்னை தனது பயணப் பொதிக்குள் மறைத்து கொண்டு சென்ற பெண் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.

தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று (29) அதிகாலை கட்டார் எயார்வைஸ் விமானத்தில் நாட்டிற்கு வந்துள்ள போதே கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான தென்னாபிரிக்க பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணிடமிருந்து சுமார் 4,068 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன் பெறுமதி 142 மில்லியன் ரூபா என சுங்க பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed