கஜகஸ்தானில் 72 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ள நிலையில் விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு நகருக்கு பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் நாட்டில் விபத்துக்குள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் இயக்கும் இந்த விமானம், கஜகஸ்தானின் அக்தாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் செய்தி நிறுவனமான டெங்கிரிநியூஸ் தெரிவித்துள்ளது.
விமானத்தில் 67 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர்.
விமானம் முதலில் க்ரோஸ்னியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் மகச்ச்கலாவிற்கும் பின்னர் அக்தாவ்விற்கும் திருப்பி விடப்பட்டது என்று க்ரோஸ்னி விமான நிலைய பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் எம்ப்ரேயர் E190AR என ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்கு முன், விமானம் அக்தாவ் விமான நிலையத்தின் மீது வட்டமிட்டு அவசரமாக தரையிறங்கக் கோரியது.
இந்நிலையில் விமானத்தில் பயணித்த எவரும் உயிர்தப்பவில்லை என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் கிருஸ்துமஸ் தினத்தில் இடம்பெற்ற இந்த விமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான எண் J2-8243, எம்ப்ரேயர் 190 விமானம், 62 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன், 3 கிமீ (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட இருபத்தேழு பேர் உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததாக அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது