• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செவ்வாய் கிழமைகளில் என்ன செய்யலாம் !என்ன செய்ய கூடாது!

Dez. 24, 2024

நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது.

செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான். மெளன அங்காரக விரதம் என்று ஒரு வகையான விரதம் உண்டு.

தர்மசாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என்கிறது.

அதாவது செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாயோ வெறும் வாயோ என்று, அன்றைய தினம் வாதம் செய்யாமல் மெளன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்வது.

செவ்வாயில் வாங்கிய கடனை செலுத்துங்கள்

இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர்.எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர்.

அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது .

செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரம்

இந்த நாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம்.

மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed