• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உண்டியலில் விழுந்த கைத்தொலைபேசி முருகனுக்கே சொந்தம்! கோவில் நிர்வாகம்

Dez 21, 2024

திருப்போருரில் முருகன் கோவில் உண்டியலில் தவறி விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம் என கோவில் நிர்வாகம் கூறியதால் பக்தர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

தமிழில் வெளியான அம்மன் படம் ஒன்றில், குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம் என சொல்லும்படியான காட்சிகள் இருக்கும். அப்படியான சம்பவம் ஒன்று உண்மையாகவே தற்போது நடந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளார். அப்போது தவறுதலாக அவர் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த ஐஃபோனும் உண்டியலுக்குள் விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தபோது உண்டியலுக்குள் விழுந்த பொருளை தற்போது எடுக்க இயலாது என்று கூறியுள்ளனர்.

தற்போது உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில் பக்தர் தவறிவிட்ட ஐஃபோனும் அதில் இருந்துள்ளது. அவருக்கு போன் செய்து அழைத்த நிர்வாகத்தினர், ஃபோன் இனி முருகனுக்கே சொந்தம் என்பதால் அந்த ஃபோனில் உள்ள தரவுகளை நேரில் வந்து வேறு ஃபோனுக்கு காப்பி செய்து கொள்ளும்படி கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed