சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபாய நிலை 2 அளவிற்கு பனிப்பொழிவு இருக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை வரை 40 சென்டிமீட்டர் வரை பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்றும், இந்த எச்சரிக்கை நாளை நண்பகல் 12 மணி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.