• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொலையை காட்டிக் கொடுத்த ‘கூகிள் மேப்’! ஒரு ஆண்டு கழித்து வெளியான மர்மம்

Dez 19, 2024

ஸ்பெயினில் ஒரு நபரை ரகசியமாக கொலை செய்து அப்புறப்படுத்திய நிலையில், அதை கூகிள் மேப்பில் பார்த்து கண்டுபிடித்த சம்பவம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வழிகாட்டியாக கூகிள் மேப் செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியான கூகிள் மேப் ஒரு கொலை வழக்கில் குற்றவாளியையே கண்டுபிடிக்க உதவியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

க்யூபாவை சேர்ந்த நபர் ஒருவர் ஸ்பெயின் நாட்டின் சோரியா பகுதியில் வசித்து வந்துள்ளார். அவருடன் ஒரு பெண்ணும் வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அந்த நபர் மாயமானார். அவரது உறவினர் ஒருவரது எண்ணுக்கு அவர் மாயமாகும் முன் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில் வேறு ஒரு பெண்ணுடன் இந்த நாட்டை விட்டு செல்வதாக வந்துள்ளது. இது சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஓராண்டாக காணாமல் போன அந்த நபர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான் கூகிள் மேப்பில் ஸ்ட்ரீட் வியூவில் பார்த்தபோது மாயமான நபர் வீட்டருகே ஒருவரை கொன்று காரில் ஏற்றும் படம் இடம்பெற்றுள்ளது. அதன்மூலமாக அவரை கொலை செய்தது அவரது மனைவியும், 2 நபர்களும் என தெரிய வந்தது. அவரை கொலை செய்து அவர்கள் காரில் ஏற்றும்போது அந்த பக்கமாக கூகிள் ஸ்ட்ரீட் வியூக்காக போட்டோ எடுத்தபடி சென்ற வாகனம் அந்த சம்பவத்தையும் படம் எடுத்துள்ளது. அது கூகிள் ஸ்ட்ரீட் வியூவில் தெரிய வந்ததால் அவர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed