• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அவுஸ்திரேலிய ஆய்வகத்தில் 323 கொடிய வைரஸ்கள் காணவில்லை!

Dez. 14, 2024
Siruppiddynet.com

அவுஸ்திரேலிய ஆய்வகத்தில் கொடிய வைரஸ்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள பொது சுகாதார வைராலஜி ஆய்வகத்தில் இருந்து 323 கொடிய வைரஸ் மாதிரிகள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெண்ட்ரா, லிஸ்ஸா, ஹாண்டா போன்ற ஆபத்தான வைரஸ்களின் மாதிரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே காணவில்லை என்ற தகவல் தற்போது தான் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மாதிரிகள் திருடப்பட்டதா அல்லது அழிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹெண்ட்ரா வைரஸ் அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும்.

லிஸ்ஸா வைரஸ் ரேபிஸை ஏற்படுத்தும் வைரஸ்களின் குழுவாகும். இருப்பினும், தற்போது இந்த வைரஸ்கள் காணாமல் போனதால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed