• Do. Dez 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செவ்வாய் கிழமையில் வீட்டை சுத்தம் செய்யலாமா?

Dez 10, 2024

வேத சாஸ்திரத்தின் ஒரு பகுதியான வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் பின்பற்ற வேண்டிய பல நடைமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. எந்த கிழமைகளில் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யகூடாது என்பவை குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீடு துடைக்க கூடாது என்பது ஐதீகமாக உள்ளது. ஒருவேளை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டை துடைத்தால் என்னவாகும் என்பது குறித்தும், செவ்வாய் கிழமைகளில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி நாம் தற்போது இங்கு பார்ப்போம்.

வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் வீட்டை துடைத்து சுத்தம் செய்தால் லட்சுமி கடாட்சம் வீட்டை விட்டு சென்று விடுமா? கண்டிப்பாக இல்லை. செவ்வாய்க்கிழமை காலை, வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு செய்யக்கூடிய பூஜை தவறி விடக்கூடாது என்பதற்காகத்தான் முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்றும் வெள்ளிக்கிழமை அன்றும் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக பூஜை செய்யும் நேரம் தவறி விடும். அப்போது வீட்டில் ஐஸ்வர்யம் நிலைக்காது. லேசாக மன கஷ்டம் வர செய்யும்.

இதனால்தான் பூஜை செய்யும் நேரம் தவறக் கூடாது என்று முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நம்முடைய வேலையை சுலபமாக்கி கொண்டால் தான் நம்முடைய மனது முழுவதையும் இறைவழிபாட்டில் இறை சிந்தனையில் ஈடுபடுத்த முடியும். பூஜை செய்யக் கூடிய அன்றைய தினமே எல்லா வேலையும் செய்தால் உடல் சோர்வு, மன சோர்வு ஏற்பட்டு விடும். நிச்சயமாக நம்முடைய வீட்டில் முழுமையான இறை வழிபாட்டில் ஈடுபட முடியாது.

வேலைக்கு செல்லக்கூடிய பெண்களால் அந்தக் கிழமையில் வீட்டினை சுத்தம் செய்ய இயலாது என்றால், எந்த கிழமை சவுகரியமுமோ, செவ்வாய்க் கிழமை வெள்ளிக் கிழமையை தவிர்த்துவிட்டு, மாலை 6 மணிக்கு முன்பாக வீட்டையும் பூஜை அறையையும், பூஜை பாத்திரங்களையும் சுத்தம் செய்துகொள்ளலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed