• Do. Dez 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் உயிரிழப்பு!

Dez 9, 2024

நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிருந்த போது வாளி கிணற்றில் விழுந்து அதனை மீட்க முற்பட்ட போது குறித்த இளைஞர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் இன்று (08) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 18 வயதுடைய மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த நபர் நேற்று (07) களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்திற்கு தனது நண்பர்கள் இருவருடன் நேர்முக பரீட்சை ஒன்றில் பங்கேற்பதற்காக வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed