சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உள்ள 16 பிராந்திய வேலைவாய்ப்பு மையங்கள் (RAV) மூடப்படவுள்ளன.
ஐந்து முதல் ஏழு மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மாநிலத்தில் அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதும், எந்தெந்த மையங்கள் அகற்றப்படும் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
5 சதவீதத்திற்கும் அதிகமான வேலையில்லாத் பிரச்சினையை கையாளும் வகையிலேயே இப்போதைய RAVகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த இருபது ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை எட்டப்படவில்லை.
சூரிச் கன்டோனில் வேலையின்மை வீதம் தற்போது 2.4 சதவீதமாக உள்ளது.
16 இடங்களில் இதனை செயல்படுத்துவதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் அதன் டிஜிட்டல் சலுகைகளை விரிவுபடுத்த விரும்புகிறது