சுக்கிரன் மற்றும் ராகு இணைவதால் அரிதான யுதி யோகம் உண்டாகும். இதனால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டில் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் ராகு கிரகங்கள் இணைய உள்ளதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன. எந்தெந்த ராசிக்கார்களுக்கு என்ன பலன் என்பதனை நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
இந்த புத்தாண்டில் சுக்கிர ராகு யுதியால் ரிஷப ராசிக்காரர்களின் பணி வாழ்வில் பெரிய முன்னேற்றம் ஏற்பட இருக்கிறது. மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பெரிய விஷயங்களை சாதிப்பீர்கள். பொருளாதார நிலை சீரடையும்.
இன்றைய இராசிபலன்கள் (08.12.2024)
கடகம்
சுக்கிர ராகு யுதி இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டுவரும். வணிகத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. முதலீட்டில் இருந்து நல்ல வருமானம் வரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பணி வாழ்வில் அனைத்தும் சீராக இருக்கும்.
துலாம்
சுக்கிர ராகு யுதி இவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றும். வேலையில் இருந்தாலும் சரி, வணிகம் செய்தாலும் சரி நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதிகள் கைக்கு வந்துச்சேரும். புது வீடு அல்லது வாகனங்களை வாங்குவீர்கள். புதுமணத் தம்பதியினருக்கும் நல்ல செய்தி வந்து சேரும்.
மகரம்
சுக்கிர ராகு யுதி உங்களை பெரிய சாதனைகள் செய்ய வழிவகை செய்யும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீட்டில் இருந்து நல்ல வருமானம் வரும். காதல் உறவில் உள்ளவர்களுக்கும் நல்ல காலம் பிறக்கிறது.
மீனம்
சுக்கிர ராகு யுதி மீனத்தில் ஏற்படுகிறது என்பதால் பெரும் பலன்கள் வந்துசேரும். படைப்பாளர்களுக்கு அவர்களின் துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். தொழில் பணப் புழக்கம் வேகமெடுக்கும். திருமண உறவும் மகிழ்ச்சியானதாக மாறும். பெரிய பெரிய சாதனைகளை, மைல்கற்களை இந்த காலகட்டத்தில் அடைவீர்கள்.