• Do. Dez 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாண கடற்பரப்பில் பெறுமதியான கஞ்சா மீட்பு!

Dez 6, 2024

யாழ்ப்பாண கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கரையொதுங்கிய இருந்த சுமார் 45.5 கிலோகிராம் கேரள கஞ்சாவை  இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையின் வடக்கு கடற்படையினரால் நேற்றிரவு (05-12-2024) கடற்கரை ஓரமாக விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இந்த நடவடிக்கையின் போது, ​​யாழ்.டெல்ஃப்ட் கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான 2 பொலித்தீன் சாக்குகளை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பரிசோதனையின் போது, ​​அந்த சாக்குகளில் 20 பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் 45.5 கிலோகிராம் கேரள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் காரணமாக கடத்தல்காரர்கள் கேரள கஞ்சாவை கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையினரல் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. 18 மில்லியன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றபட்ட கேரள கஞ்சா தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed