அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி வியாழன் காலை 10.45 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
றிச்டர் அளவில் 7.0 ஆக இருந்த இந்த நில நடுக்கம் வடக்கு கலிபோர்னியாவின் கரையோரத்தில் இருந்து சுமார் 60 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இன்றைய இராசிபலன்கள் (06.12.2024)
இதையடுத்து கலிபோர்னியாவின் கரையோரப்பகுதிகளில் உள்ள சுமார் 5.3 மில்லியன் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் கரையோரப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.