வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 07ஆம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து வெளியேறப்போகும் புலம்பெயர்ந்தோர்!
இது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 19ஆம் திகதி அன்று மீண்டும் ஒரு தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதிரிகள் இது ஒரு புயலாக வலுப்பெறும் என வெளிப்படுத்துகின்றன. அதேவேளை சில மாதிரிகள் இதனை கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மித்து வரும் என காட்டுகின்றன.
இன்றைய இராசிபலன்கள் (05.12.2024)
எவ்வாறாயினும் இதனை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
எனவே எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையும் பின்னர் 21 முதல் 25ஆம் திகதி வரையும் சில பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேவேளை எதிர்வரும் 09ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இடையிடையே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.