கனடாவில் அடுத்த வருடத்தின்(2025) இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேறவேண்டிய நிலை ஏற்படுமென அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்
இவ்வாறு அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளமையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்காலிக அனுமதி பெற்று கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.