• Mi. Dez 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றைய இராசிபலன்கள் (04.12.2024)

Dez 4, 2024

மேஷம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

3ஆம் ஆண்டு நினைவு.அமரர்.திருமதி மனோன்மணி செல்வராஜா (04.12.2024, சிறுப்பிட்டி வடக்கு )

ரிஷபம்

இன்று வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் பிணக்குகள் வராது. புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். தடைப்பட்ட ஆலயத் திருப்பணிகள் தடையின்றி முடியும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி விற்பனை, லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்

இன்று கலைத்துறையினருக்கு டென்ஷன் உண்டாகலாம். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை நிறுவும் திட்டம் நிறைவேறும். உங்களை எதிர்த்துத் தொழில் செய்தவர்கள் உங்களைக் கண்டு மிரண்டு ஓடுவார்கள். வெளிநாட்டில் தொழில் துவங்க இருந்த தடைகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் வெள்ளம்! 30 பேர் உயிரிழப்பு 

கடகம்

இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். முதியோர்களால் வைத்தியச் செலவுகள் வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி எண்ணம் ஈடேறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்

இன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள். புதிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பெண்கள் விரும்பிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். அடகுபோன நகைகளையும் மீட்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி

இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், மாறுதலும் கிட்டும். காவல்துறை, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரிகள் திட்டமிட்டபடி நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்

இன்று மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வி நிறுவனத்தாரின் பாராட்டைப் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்களின் லாபம் கூடும். உற்பத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்

இன்று கூட்டு வியாபாரம் திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்தி கரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரனையால் சந்தோஷம் கொள்வீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு

இன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். நீண்ட நாளைய நண்பரைப் பிரிய வேண்டி வரலாம். அனைத்து சங்கடங்களும் விலகி நல்ல பலன்களை அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்

இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த பிள்ளைகளின் மனநிலை மாறும். அவர்கள் நல்ல வேலை வாய்ப்பை அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறமையோடு இருப்பார்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்

இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி லாபம் பெருகும். வியாபாரிகளும் நல்ல லாபம் பெறுவார்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் வந்துசேரும். சகோதரர்கள் சண்டை நீங்கி ஒன்றுகூடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்

இன்று அடுத்தவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அரசியல் துறையினருக்கு மேலிடத்திற்கும் உங்களுக்கும் திடீர் இடைவெளி ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். உத்யோகஸ்தர்கள் பணிச்சுமையில் அவதிப்பட்டது மாறும். கேட்டபடி மாறுதல் கிடைக்கும். சிலர் விருப்ப ஓய்வில் செல்வார்கள். திட்டமிட்டபடி எதிர்காலத்தை அமைத்துக்கொள்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed