• Mi. Dez 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பூசகர் பரிதாபமாக பலி

Dez 2, 2024

யாழில் (Jaffna) வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்த வேளை கிணற்றினுள் விழுந்து பூசகர் ஒருவர் உயிழிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற 52 வயதுடைய பூசகரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துக்கொண்டு இருந்தவேளை கால்தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் கிணற்றினுள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தநிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed