இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (29.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.32 ஆகவும் விற்பனைப் பெறுமதி 295.04 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.34 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 376.47 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.55 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.23 ஆகவும் விற்பனைப் பெறுமதி 212.09 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184.45 ஆகவும் விற்பனைப் பெறுமதி 194.12 ஆகவும் பதிவாகியுள்ளது.
தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
தங்கத்தின் விலையானது இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மாற்றமடைந்த தங்க விலையானது நேற்று (28.11.2024) அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி (29.11.2024) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 766,187 ரூபாவாக காணப்படுகின்றது
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,030 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 216,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 198,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,660 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 189,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 211,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 194,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.