நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு , கிழக்கு மக்கள் அதிகம் அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர்.
யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து பாரிய கொள்ளை.
இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 2.30 அளவில் திருகோணமலையில் இருந்து கிழக்காக 100 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு , கிழக்கில் 150 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி
அது இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து வடக்காக நகர்வதாகவும் இன்றைய தினத்துக்குள் அது புயலாக வலுவடையக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்காரணமாக வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்றைய தினம் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.
அதேநேரம் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இஇந்நிலையில், நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.