• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர் திடீர் மரணம்!

Nov. 23, 2024

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (23.11.2024)

இச்சம்பவத்தில் மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 32 வயதான உதயகுமார் சஜிந்தன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் இன்றையதினம் (22-11-2024) காலை தனது வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேளை திடீரென மயக்கமுற்றுள்ளார்.இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இதன்போது மாரடைப்பினால் அவரது மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed