பிரித்தானியா (UK) வேல்ஸில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளதால் நாடு முழுவதும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மின் வழங்கல் அமைப்பால் மக்ககளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது மின்சாரம் மற்றும் எரிவாயு வழங்கல் அமைப்பான Direct Energy, பாண், சூப் முதலான டின்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், கெட்டுப்போகாத குக்கீஸ் முதலான ஸ்நாக்ஸ் வகைகள், Cereal வகை உணவுகள் மற்றும் உலர்ந்த பாஸ்தா மற்றும் சாஸ் உணவுகள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பெர்ட் புயல் வரும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நீடித்த“ கனமழையை எதிர்பார்க்கலாம், தெற்கு வேல்ஸில் சில பகுதிகளில் 150 மிமீ மழை பெய்யக்கூடும், மேலும் 75 மிமீ இன்னும் பரவலாகப் பெய்யக்கூடும்
நாட்டின் வடபகுதியில் சில மணிநேரங்களில் 100 முதல் 150 மிமீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Ceredigion, Conwy, Gwynedd, Anglesey மற்றும் Pembrokeshire ஆகிய பகுதிகளில் 50 முதல் 60மைல் வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசக்கூடும்.
வேல்ஸ் முழுவதும் உள்ள ஓட்டுநர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கான உணவு தண்ணீர், அத்தியாவசிய மருந்துகள், போர்வைகள், டார்ச் , பேட்டரிகள், சார்ஜர்கள் ஆகியவற்றையும் தயாராக வைத்துக்கொள்ளுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மேற்கு மற்றும் வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்தின் பல இடங்களுக்கு, உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை காலை 4.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி வரை மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.