• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்

Nov. 22, 2024

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பெண் வைத்தியரின் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி , பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியான பெண் வைத்தியர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து, கைதான வைத்தியர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல் | Dies In Jaffna Accident Female Doctor Remanded
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed