• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த நடத்துநர் உயிரிழப்பு.

Nov. 18, 2024

கடுவலை – கொள்ளுப்பிட்டி வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மிதிபலகையிலிருந்து கீழே தவறி வீழ்ந்து பஸ் நடத்துனர் உயிரிழந்துள்ளதுடன் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

உயிரிழந்த பஸ் நடத்துனரும் காயமடைந்த பயணியும் பஸ்ஸின் பின்புறத்தில் உள்ள மிதிபலகையில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து கீழே தவறி வீழ்ந்துள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பஸ் நடத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed