• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாக்களிப்பதற்காக சென்ற குடும்பம் விபத்து! மனைவி பலி! கணவன், மகள் படுகாயம்!!

Nov. 14, 2024

களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் கிராமத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, லொறியுடன் நேற்று பிற்பகல் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பெத்தேவத்தை, மித்தெனிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சம்பிகா உதயங்கனி என்ற 34 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது கணவர் மற்றும் 7 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோர் படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி கெஸ்பேவயிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​ஹொரணையிலிருந்து எதிர்திசையில் இருந்து வந்த லொறி ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் கஹதுடுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஏனையவர்களுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed