• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாய் மற்றும் மகள் கைது!

Nov. 10, 2024

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வவுனியா பகுதியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை 

குறித்த சந்தேக நபர்கள் நேற்றிரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கம்பளை பகுதியில் வசிக்கும் இருவரும் 61 மற்றும் 38 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 78,200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான தாயும் மகளும் டுபாயிலிந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு Fly Dubai Airlines இன் F.Z-549 விமானம் மூலம் வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 13 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed